தினம் ஒரு குர்ஆன் வசனம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் பாடல்
“இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”
“இல்லை என்ற சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்
“தேடும் நேயர் நெஞ்சினில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் வளர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலை முழங்கும் கடல் அமைத்து அழுகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
தரணி யெங்கும் நிறைந்து இருக்கும் மகா வல்லவன்”
“ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்
அள்ளல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்
அள்ளல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேற் அருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்து சொல்லிக் காட்டுங்கள்
அன்புனோர்க்கு தருக என்று அழுது கேளுங்கள்...
இறைவனிடம் கையெந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.......”
--------------------------------------------------------------------------------------------------------------------------
எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
கல்லாகப் படுத்திருந்து களிப்பவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
நூறு வகைப் பறவை வரும் கோடி வகைப் பூ மலரும்
ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா
கருப்பில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்
இன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்
ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா?
ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்துவைத்தான்
எடுத்தவன் மறைத்துக்கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
மண்ணிலே வெண்ணெய் கண்டு ஒன்றாய்க் கூடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோரை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
(அல்லாவை..)
அல்லாவை நாம் தொழுதால்..
பள்ளிகள் பல இருந்தும்
மாந்தோசை கேட்ட பின்பும்
(பள்ளிகள்..)
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
(பள்ளி..)
(அல்லாவை..)
வழிகாட்ட மற இருந்தும்
வள்ளல் நபி இருந்தும்
(வழிகாட்ட..)
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ
(விழி..)
(அல்லாவை..)
இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
(இறையோனின்..)
இறைதூதர் போதனையை
இகமெங்கும் பரப்பிடுவோம்
(இறைதூதர்..)
(அல்லாவை..)
படம்: இறைவனிடம் கையேந்துங்கள்
பாடியவர்: நகூர் M. ஹனிஃபா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :...
-
நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக