அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு!

Blogger Widgets
அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ - “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” 9:129

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

குர்ஆன் என்னும் மகிழ்ச்சியான செல்வம்! - தினம் ஒரு குர்ஆன் வசனம்

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங் கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 10:58)

Share/Bookmark

புதன், 29 ஆகஸ்ட், 2012

தூதர்கள் எதற்காக வந்தார்கள்? - தினம் ஒரு குர்ஆன் வசனம்

தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:165)


Share/Bookmark

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

வறுமையும் பிணியும் ஏன்? - தினம் ஒரு குர்ஆன் வசனம்

நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை. (அல்குர்ஆன்: 7:94)

Share/Bookmark

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நிராகரிப்பு என்பது நன்றி மறத்தலே! - தினம் ஒரு குர்ஆன் வசனம்

ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரனத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராக இருந்து விடுகின்றனர். (அல்குர்ஆன்: 30:51)

Share/Bookmark

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

நமது செயல்கள், நுணுக்கமாக கண்கானிக்கப்படுவது பற்றி.. - தினம் ஒரு குர்ஆன் வசனம்

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்: 50:16)

Share/Bookmark

சனி, 18 ஆகஸ்ட், 2012

அறிந்து கொண்டும் அறிவீனர்களாக இருப்பவர்கள் பற்றி - தினம் ஒரு குர்ஆன் வசனம்

அல்லாஹ் எவருடைய இருதயத்தை இஸ்லாத்திற்காக விசாலமாக்குகிறானோ அவர் தம் இறைவனின் ஒளியில் இருக்கிறார்;(ஆனால்) அல்லாஹ்வுடைய திக்ரை – நினைவை விட்டும் விலகி எவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டனவோ, அவர்களுக்குக் கேடுதான் – இத்தகையோர் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 39:22)

Share/Bookmark

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

நோவினை செய்யும் வேதனை என்ற நன்மாராயம்! - தினம் ஒரு குர்ஆன் வசனம்

ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (அல்குர்ஆன்: 9:34)

Share/Bookmark

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

இறை சோதனையில் நல்லுணர்ச்சி பெறுவதில்லையே! - தினம் ஒரு குர்ஆன் வசனம்

‘ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள்’ என்பதை அவர்கள் காணவில்லையா? அப்படியிருந்தும் அவர்கள் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து மீள்வதுமில்லை (அதுபற்றி) நினைவு கூர்ந்து நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை. (அல் குர்ஆன் 9:126)


Share/Bookmark

புதன், 15 ஆகஸ்ட், 2012

உருவம் இல்லாமலேயே நீ தங்கியிருந்த இடம்! - தினம் ஒரு குர்ஆன் வசனம்

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, ( பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 6:98)

Share/Bookmark

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:8. இன்னும்; கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

Share/Bookmark

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

குறித்த நேரத்தில் தொழுகை - தினம் ஒரு குர்ஆன் வசனம்

"நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது."
-திருக்குர்ஆன் 4:103


Share/Bookmark

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

பிரார்த்தனை அல்லாஹ்வுக்கே... தினம் ஒரு குர்ஆன் வசனம்

"உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ்அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்,) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது; (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் நிராகரிப்போர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை".


-திருக்குர்ஆன் 13:14


Share/Bookmark

சனி, 11 ஆகஸ்ட், 2012

நீங்கள் அமைதிபெற - தினம் ஒரு குர்ஆன் வசனம்

"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
 
-திருக்குர்ஆன் 21:30


Share/Bookmark

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நரகின் பால் அவருக்கு வழி காட்டுகிறான் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:4. அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.

Share/Bookmark

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஒருவருக்கொருவர் ஆடையாவர் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். - 


Share/Bookmark

புதன், 8 ஆகஸ்ட், 2012

அல்லாஹ் தன் அடியார்களுக்கு தீங்கிழைப்பதில்லை - தினம் ஒரு குர்ஆன் வசனம்

எவரேனும் நன்மை செய்தால் அது அவருக்கே நன்மையாகும். எவரேனும் பாவம் செய்தால் அது அவருக்கே கேடாகும். உம் இறைவன் தன் அடியார்களுக்கு அறவே தீங்கிழைப்பதில்லை”. (அல்குர்ஆன்: 41:46)

Share/Bookmark

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

இறைவனை பயந்து கொள்ளுங்கள் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:1. மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான் பெரும் நிகழ்ச்சியாகும்.

Share/Bookmark

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.



  Share/Bookmark

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:3. இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.



Share/Bookmark

சனி, 4 ஆகஸ்ட், 2012

இறுதித் தீர்ப்புக்காக நீங்கள் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.



Share/Bookmark

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

அல்லாஹ் அவனே உண்மையானவன் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:6. இது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.

  Share/Bookmark

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான் - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

  Share/Bookmark

புதன், 1 ஆகஸ்ட், 2012

இறைவனிடம் மட்டும் கேட்போம் - அல்லாஹ்,

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)
நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :""மகனே! உனக்கு சில விஷயங்களைக் கூறுகின்றேன்(கவனத்துடன் கேள்!) நீ இறைவனை நினைவு கூரு; இறைவன் உன்னை நினைவு கூருவான். நீ இறைவனை நினைவில் வைத்தால், அவனை உன் முன்னாலேயே காண்பாய். கேட்டால் இறைவனிடம் கேள்! ஏதேனும் துன்பத்தில் நீ உதவி கோரினால் இறைவனிடமே உதவி கேள்! இறைவனை உனக்கு உதவியாளனாக ஆக்கு! மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு உனக்கு நன்மையேதும் செய்திட விரும்பினாலும் அல்லாஹ் உனக்காக எழுதி வைத்த அளவே கிடைக்கும். அதைத் தவிர வேறு எவராலும் உனக்கு எதுவும் அளித்திட இயலாது. (அதாவது கொடுப்பதற்கென எவரிடத்திலும் எதுவுமில்லை. அனைத்தும் இறைவன் வழங்கியவை தாம். எவருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டுமென அவன் முடிவு செய்கிறானோ அந்த அளவு தான் அவருக்குக் கிடைக்கும். அது எந்த வழியில்- எவர் மூலமாகக் கிடைத்தாலும் சரியே!) மேலும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி உனக்குத் தீங்கு விளைவிக்க நாடினாலும், அல்லாஹ் உனக்கு விதித்து வைத்ததைத் தவிர வேறெந்தத் தீங்கினையும் அவர்களால் உனக்கு விளைவித்திட முடியாது. (எனவே, அல்லாஹ்வை மட்டுமே நீ உனக்கு ஒரே துணைபுரிபவனாக ஆக்கிக் கொள்ள வேண்டும்)'' (மிஷ்காத்)


நோய் வருவதன் காரணம்அறிவிப்பாளர்: அபூ கிஸாமா(ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து:
எனது தந்தை கூறினார்கள்: நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், ""நாங்கள் எங்களுடைய நோய்கள் குணமாவதற்கு ஓதி ஊதி பிரார்த்தனை செய்வதும், எங்களுடைய நோய்களை நீக்கிக் கொள்வதற்காக நாங்கள் மருந்துகளைப் பயன்படுத்துவதும், துன்பங்கள், துயரங்களிலிருந்து தப்பித்திட நாங்கள் மேற்கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் விதியைக் கொஞ்சமாவது தடுத்திடுமா?'' என்று வினவினேன். அதற்கு ""இவையனைத்தும் கூட அல்லாஹ்வின் விதியே ஆகும்'' என அண்ணலார் கூறினார்கள். (திர்மிதி) அண்ணல்நபி(ஸல்) அவர்களுடைய பதிலின் சாரமாவது: எந்த இறைவன் இந்த நோயை நம் விதியில் எழுதினானோ, அதே இறைவன் தான் இந்த நோயை இன்ன மருந்தினால் அல்லது இன்ன வழிமுறையினால் போக்கி விட முடியும் என்று தீர்மானித்துள்ளான். நோயைக் கொடுத்தவனும் இறைவனே; அதனை நீக்கும் மருந்தைப் படைத்தவனும் அவனே! அனைத்துமே அவனால் தீர்மானிக்கப்பட்ட நியதிகள், சட்டங்களின்படியே நடை பெறுகின்றன.



Share/Bookmark

அல்லாஹ்வின் பாதை - தினம் ஒரு குர்ஆன் வசனம்

22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.

Share/Bookmark

பிரபலமான இடுகைகள்