தினம் ஒரு குர்ஆன் வசனம் - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன்.
செவ்வாய், 31 ஜூலை, 2012
திங்கள், 30 ஜூலை, 2012
இதுதான் தெளிவான நஷ்டமாகும் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
22:11. இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்

ஞாயிறு, 29 ஜூலை, 2012
சனி, 28 ஜூலை, 2012
வெள்ளி, 27 ஜூலை, 2012
நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
22:15. எவன் (நம் தூதர் மேல் பொறாமை கொண்டு) அல்லாஹ் அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலுமு; உதவி செய்யமாட்டான் என்று எண்ணுகிறானோ, அவன் ஒரு கயிற்றை வானத்தின் அளவுக்கு நீட்டிப் பின்னர் (நபிக்குக் கிடைத்து வரும் இறையருளைத்) துண்டிக்க (முற்பட)ட்டுமே! இந்த வழி தன்னை ஆத்திர மூட்டச் செய்ததைப் போக்குகிறதா என்று பார்க்கட்டும்!

வியாழன், 26 ஜூலை, 2012
புதன், 25 ஜூலை, 2012
அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
22:17. திடனாக, ஈமான் கொண்டார்களே அவர்களுக்கும்; யூதர்களாகவும், ஸாபியீன்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், மஜூஸிகளாகவும் ஆனார்களே அவர்களுக்கும், இணைவைப்போராய் இருந்தார்களே அவர்களுக்கும் இடையில் (யார் நேர்வழியில் இருந்தார்கள் என்பது பற்றி) நிச்சயமாக அல்லாஹ் கியாம நாளில் தீர்ப்புக் கூறுவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியமாக இருக்கிறான்.

செவ்வாய், 24 ஜூலை, 2012
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
22:18. வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸ{ஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.


திங்கள், 23 ஜூலை, 2012
ஞாயிறு, 22 ஜூலை, 2012
சனி, 21 ஜூலை, 2012
வெள்ளி, 20 ஜூலை, 2012
வியாழன், 19 ஜூலை, 2012
புதன், 18 ஜூலை, 2012
செவ்வாய், 17 ஜூலை, 2012
அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
22:25. நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.

திங்கள், 16 ஜூலை, 2012
ஞாயிறு, 15 ஜூலை, 2012
சனி, 14 ஜூலை, 2012
வெள்ளி, 13 ஜூலை, 2012
அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான். சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர – ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள். (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன். ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும்

வியாழன், 12 ஜூலை, 2012
புதன், 11 ஜூலை, 2012
ஏக இறைவனை மறுப்பவன் - தினம் ஒரு குர்ஆன் வசனம்
'அல்லாஹ்வை அன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்" (முஹம்மதே) உம்மை நற்ச்செய்தி கூறு பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம். "தனது இறைவனுடன் தொடர்பை ஏற்ப்படுத்திக் கொள்ள விரும்பு பவரைத்தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுவீராக. மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்து இருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.
அல் குரான் 25 : 55, 56, 57, 58
செவ்வாய், 10 ஜூலை, 2012
அல்லாஹ் காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.- தினம் ஒரு குர்ஆன்
2:19. அல்லது, (இன்னும் ஓர் உதாரணம்) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்; (இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தவனாகவே இருக்கின்றான்.
திங்கள், 9 ஜூலை, 2012
அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.- தினம் ஒரு குர்ஆன்
2:18. (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.
ஞாயிறு, 8 ஜூலை, 2012
அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்- தினம் ஒரு குர்ஆன்
2:17. இத்தகையோருக்கு ஓர் உதாரணம் நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்
சனி, 7 ஜூலை, 2012
வியாபாரம் இலாபம் தராது - தினம் ஒரு குர்ஆன்
2:16. இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது; மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர்.
வெள்ளி, 6 ஜூலை, 2012
அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான் - தினம் ஒரு குர்ஆன்
2:15. அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.
வியாழன், 5 ஜூலை, 2012
நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் - தினம் ஒரு குர்ஆன்
2:14. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள்.
புதன், 4 ஜூலை, 2012
தம் மடமையை இவர்கள் அறிவதில்லை - தினம் ஒரு குர்ஆன்
2:13. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.
செவ்வாய், 3 ஜூலை, 2012
அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை - தினம் ஒரு குர்ஆன்
2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
திங்கள், 2 ஜூலை, 2012
நாங்கள் தாம் சமாதானவாதிகள் - தினம் ஒரு குர்ஆன்
2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
ஞாயிறு, 1 ஜூலை, 2012
இதயங்களில் ஒரு நோயுள்ளது - தினம் ஒரு குர்ஆன்
2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி) நான் ஒருநாள் வாகனத்தில் அண்ணலாரின் பின்னால் அமர்ந்திருந்தேன். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :...
-
நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும்...